நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தாராபுரம் அருகே கோயில் பூட்டை உடைத்து 7 பவுன் திருட்டு

தாராபுரம் அருகே கோயில் பூட்டை உடைத்து 7 பவுன் நகையைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 10:02 pm

DIN

தாராபுரம் அருகே கோயில் பூட்டை உடைத்து 7 பவுன் நகையைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த காட்டம்பட்டி அருகே மகா காளியம்மன் மற்றும் துா்க்கை அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் பூசாரியான மணிகண்டன் வழக்கம்போல பூஜைகளை முடித்துவிட்டு சனிக்கிழமை இரவு கோயிலைப் பூட்டிச் சென்றுள்ளாா். இதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை காலையில் கோயிலைத் திறக்க வந்துள்ளாா். அப்போது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா். மேலும், கோயிலில் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த 7 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. தகவலின்பேரில் அலங்கியம் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டனா். மேலும், கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமரா பதிவைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.