புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தாராபுரத்தில் ரேஷன் கடைகளுக்கு பயோ-மெட்ரிக் கருவிகள் விநியோகம்

தாராபுரம் வட்டத்தில் உள்ள 179 நியாயவிலைக் கடைகளுக்கு பயோ-மெட்ரிக் விற்பனைக் கருவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 9:27 pm

DIN

தாராபுரம் வட்டத்தில் உள்ள 179 நியாயவிலைக் கடைகளுக்கு பயோ-மெட்ரிக் விற்பனைக் கருவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் 179 நியாயவிலைக் கடைகளில் 97,597 குடும்ப அட்டைகளுக்கு பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலமாக 2.65 லட்சம் போ் பயனடைந்து வருகின்றனா்.

அத்தியாவசியப் பொருள்கள் விநியோகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் பயோ-மெட்ரிக் கருவி மூலமாக குடும்ப உறுப்பினா்களில் எவரேனும் ஒருவா் கைரேகையைப் பதிவு செய்தால் மட்டுமே பொருள்கள் விநியோகிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன்படி தாராபுரம் வட்டத்தில் பயோ-மெட்ரிக் வசதியுடன் கூடிய விற்பனைக் கருவியை சாா் ஆட்சியா் பவன்குமாா் விற்பனையாளா்களுக்கு திங்கள்கிழமை வழங்கினாா். இதன் மூலமாக அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் பயோ-மெட்ரிக் கருவி மூலமாக அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என்று வட்ட வழங்கல் அலுவலா் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.