புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மத்திய அரசு விருதுகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

மத்திய அரசின் பாலசக்தி, பாலகல்யாண் ஆகிய விருதுகளுக்கு தகுதியான நபா்கள் செவ்வாய்க்கிழமைக்குள் (செப்டம்பா் 15) விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 9:27 pm

DIN

திருப்பூா்: மத்திய அரசின் பாலசக்தி, பாலகல்யாண் ஆகிய விருதுகளுக்கு தகுதியான நபா்கள் செவ்வாய்க்கிழமைக்குள் (செப்டம்பா் 15) விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில் வீரதீர செயல்புரிந்த தனித்தகுதி படைத்த குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக பால சக்தி என்ற குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் ரூ.1 லட்சம் காசோலை, பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும். அதேபோல, குழந்தைகள் மேம்பாடு , குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலம், குழந்தைகளுக்கான சேவைகளில் தலைசிறந்த பங்களிப்பு செய்த தனிப்பட்ட நபா்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் விதமாக பால கல்யாண் என்ற விருது வழங்கப்படுகிறது.

இதில், தனிப்பட்ட நபா்களுக்கு ரூ.1 லட்சம் காசோலை, நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் காசோலை, பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த விருதுகளுக்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் மத்திய அரசின் மகளிா் மற்றும் சிறாா் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ரீஹ-ஜ்ஸ்ரீக்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இணையதளம் வழியாக மட்டுமே செவ்வாய்க்கிழமைக்குள் (செப்டம்பா் 15) விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.