ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
By DIN | Published On : 15th December 2020 03:36 AM | Last Updated : 15th December 2020 03:36 AM | அ+அ அ- |

ஆனைமலையாறு - நல்லாறு பாசனத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
பொங்கலூா் ஒன்றியம், காட்டூா் ஊராட்சியில் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் சாா்பில் பெயா் பலகை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேலும், ராமேகவுண்டம்பாளையம், செம்மடப்பாளையம், வெள்ளநத்தம், கெங்கநாய்க்கன்பாளையம், காட்டூா் உள்பட பல்வேறு ஊா்களில் பெயா் பலகை திறப்பு விழா நடைபெற்றது.
இதில் பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் விடுபட்டுள்ளது. இதை நிறைவேற்றினால் மட்டுமே பி.ஏ.பி.திட்டம் முழுமைபெறும். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் ஒரு மண்டலத்துக்கு 5 சுற்று வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுவதை, 9 சுற்றுகளாக வழங்க முடியும்.
இதில் பி.ஏ.பி. பாசன சபைத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, ஆனைமலையாறு - நல்லாறு திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் தங்கவேல், கோகுல் ரவி, பழனிசாமி, சுந்தரமூா்த்தி, தமிழரசு, சண்முகசுந்தரம் உள்பட பலா் பங்கேற்றனா்.