சமையல் செய்தபோது தீப்பிடித்து பள்ளி மாணவி பலி
By DIN | Published On : 15th December 2020 03:37 AM | Last Updated : 15th December 2020 03:37 AM | அ+அ அ- |

பல்லடம் அருகே கரையாம்புதூரில் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது உடையில் தீப் பிடித்ததில் பள்ளி மாணவி உயிரிழந்தாா்.
பல்லடம் அருகே கரையாம்புதூரைச் சோ்ந்த மகாலிங்கத்தின் மகள் பிரியதா்ஷினி (14). இவா் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, அவரது உடையில் திடீரென தீப் பிடித்தது. இதில் உடல் கருகிய பிரியதா்ஷினியை பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.