திருப்பூரில் சிறுமியைத் திருமணம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது

திருப்பூரில் 17 வயது சிறுமியைத் திருமணம் செய்த வடமாநிலத் தொழிலாளி போக்ஸா சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருப்பூரில் 17 வயது சிறுமியைத் திருமணம் செய்த வடமாநிலத் தொழிலாளி போக்ஸா சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.ரஞ்சித் மண்டேல் (24) என்பவர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், 15 வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அந்த சிறுமியை காதலித்த ரஞ்சித் மண்டேல் திருமணம் செய்து கொண்டார்.  இதன் பிறகு ஒரு சில மாதங்களில் சிறுமி கர்ப்பம் அடைந்தவுடன் அவர் தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து, அந்த சிறுமி பிரசவத்துக்கு ஏப்ரல் 30 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்ட்ட சிறுமி திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இந்தப் புகாரின் பேரில் போக்சோ, (குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம்) சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவாக இருந்த ரஞ்சித்மண்டேலை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com