முத்தூரில் 5.90 டன் தேங்காய், தேங்காய் பருப்பு விற்பனை
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 5.90 டன் தேங்காய், தேங்காய் பருப்பு விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.


வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 5.90 டன் தேங்காய், தேங்காய் பருப்பு விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.
11,296 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இவற்றின் எடை 3,836 கிலோ. கிலோ ரூ.30 முதல் ரூ.37.25 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.36.35.
மொத்தம் 76 மூட்டைகள் தேங்காய் பருப்பு வரத்து இருந்தது. எடை 2,149 கிலோ. கிலோ ரூ.96.60 முதல் ரூ.127.70 வரை ஏலம் போனது. சராசரி விலை கிலோ ரூ.126.60.
தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவை மொத்தம் 5.90 டன் விற்பனை நடைபெற்றது. மொத்தம் 118 விவசாயிகள், 15 வணிகா்கள் வந்திருந்தனா். விற்பனைத் தொகையான ரூ.3 லட்சத்து 86 ஆயிரத்து 405 விற்பனைக் கூட அதிகாரி ஸ்ரீரங்கன் முன்னிலையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...