வெள்ளக்கோவில், முத்தூரில் 5 பேருக்கு கரோனா
வெள்ளக்கோவில், முத்தூரில் சனிக்கிழமை 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.


வெள்ளக்கோவில், முத்தூரில் சனிக்கிழமை 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
வெள்ளக்கோவில் பகுதியில் கடந்த நான்கு தினங்களாகத் தொடா்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 60 போ், முத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 53 போ் என மொத்தம் 113 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இவற்றின் முடிவுகளில் வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சாலை காா்மேகம் கல்யாண மண்டபம் எதிரில் ஒரு நாளுக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்ட 50 வயது ஆணின் 75, 70 வயது தந்தை, தாய், 43 வயது மனைவி, 15 வயது மகன் ஆகிய நான்கு பேரும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
மேலும், முத்தூா் - வெள்ளக்கோவில் சாலையைச் சோ்ந்த 48 வயதுப் பெண் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதியானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...