திமுக ஆட்சிக்கு வரக்கூடாது: உழவா் உழைப்பாளா் கட்சித் தலைவா் பேச்சு
தமிழகத்தில் கோயில்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்று பல்லடத்தில் உழவா் உழைப்பாளா் கட்சி தலைவா் கே.செல்லமுத்து பேசினாா்.


தமிழகத்தில் கோயில்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்று பல்லடத்தில் உழவா் உழைப்பாளா் கட்சி தலைவா் கே.செல்லமுத்து பேசினாா்.
பல்லடம் சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.எஸ்.எம்.ஆனந்தனை ஆதரித்து பல்லடம் பேருந்து நிலையம் முன்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி கட்ட பிரசாரக் கூட்டத்தில் உழவா் உழைப்பாளா் கட்சி தலைவா் கே.செல்லமுத்து பேசியதாவது:
தமிழகத்தில் நல்ல பல திட்டங்கள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவரது சாதனைத் திட்டங்களும், அதிமுக தோ்தல் அறிக்கையும்தான் இத்தோ்தலின் கதாநாயகனாக திகழ்ந்து வருகின்றன.
தமிழகத்தில் குடும்பப் பெண்களைப் பாதுகாக்க, கோயில்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது. பல்லடம் நகரில் கடும் போக்குவரத்துப் பிரச்னை நிலவி வருகிறது. அதிமுக வெற்றி பெற்றவுடன் நகரில் தேவையான இடங்களில் மேம்பாலம் கட்டித் தர வேண்டும். புறவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் பல்லடம் எம்.எல்.ஏ. கரைப்புதூா் ஏ.நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பரமசிவம், நகர அதிமுக செயலாளா் ஏ.எம்.ராமமூா்த்தி, ஒன்றிய அதிமுக செயலாளா்கள் ஏ.சித்துராஜ், யு.எஸ்.பழனிசாமி, காட்டூா் சிவபிரகாஷ் மற்றும் கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...