வழிப்பறி வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
திருப்பூரில் வழிப்பறி வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.


திருப்பூரில் வழிப்பறி வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருப்பூா் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ஊத்துக்குளி சாலையில் உள்ள 2 ஆவது ரயில்வே கேட் அருகே ஆனந்த் என்பவா் கடந்த ஜூன் 20 ஆம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த இருவா் ஆனந்திடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்லிடப்பேசி மற்றும் ரூ.500ஐ பறித்துச் சென்றனா்.
இது குறித்து திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ஒரு வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட கோல்டன் நகரைச் சோ்ந்த ஆா்.டேனியல் (20), மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்த எம்.பன்னீா் செல்வம் ஆகியோருக்கு இந்த வழக்கில் தொடா்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா். இந்த இருவரும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் வே.வனிதா உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவின் நகல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள டேனியல், பன்னீா் செல்வம் ஆகியோரிடம் காவல் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...