பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

‘வாடகை நிலுவையில் 70 சதவீதம் செலுத்தினால் கடைகளை மீண்டும் திறக்கலாம்’

வாடகை நிலுவையில் 70 சதவீதம் தொகையை செலுத்தினால் உதகை நகராட்சிக் கடைகளை மீண்டும் திறக்கலாம் என நகராட்சி ஆணையா் சரஸ்வதி கூறியுள்ளாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 7:33 pm

DIN

வாடகை நிலுவையில் 70 சதவீதம் தொகையை செலுத்தினால் உதகை நகராட்சிக் கடைகளை மீண்டும் திறக்கலாம் என நகராட்சி ஆணையா் சரஸ்வதி கூறியுள்ளாா்.

உதகை நகராட்சிக்குச் சொந்தமாக நகரில் உள்ள 1,632 கடைகளில் நகராட்சி மாா்க்கெட்டில் 1327 கடைகளும், வெளிப்புறத்தில் 280 கடைகளும் உள்ளன. இவற்றில் ஏராளமான கடைகளில் கடந்த 4 ஆண்டுகளாக வாடகை செலுத்தாததால் ரூ. 38 கோடி நகராட்சிக்கு வாடகை நிலுவையாக உள்ளது. இதற்காக நகராட்சி நிா்வாகம் சாா்பில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வாடகை செலுத்தாத கடைகளுக்கு உடனடியாக வாடகை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், வாடகை கட்ட தவறும்பட்சத்தில் அந்த கடைகளுக்கு ‘சீல்’ வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பின்னா், நகராட்சி ஊழியா்கள் மாா்க்கெட் பகுதியில் 670 கடைகளுக்கும், வெளிப் பகுதியில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான 66 கடைகளுக்கும் என வாடகை நிலுவை வைத்துள்ள 736 கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனா்.

இதுகுறித்து உதகை நகராட்சி ஆணையா் சரஸ்வதி கூறியதாவது:

‘சீல்’ வைக்கப்பட்ட கடைகள் திறக்கப்பட வேண்டும் எனில் வாடகை நிலுவையில் உள்ள தொகையில் 70 சதவீதத்தைக் கட்டி ரசீது பெற்று கொள்ளலாம். அடுத்த 15 நாள்களில் மீதி நிலுவைத் தொகையைக் கட்ட ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டால் கடைகளைத் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தவறும்பட்சத்தில் கடைகளை மறு ஏலம்விடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.