

சட்டமேதை அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, காங்கயம் அருகே, படியூரில் அவரது உருவப் படத்திற்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே, படியூரில் உள்ள அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் துவக்க விழா நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், கலந்து கொண்ட செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டு, அந்த நிகழ்ச்சியில் சட்டமேதை அம்பேத்கரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
இதில், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், படியூர் ஊராட்சித் தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.