நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இங்கிலாந்து: ஒமைக்ரான் தொற்றால் 246 பேர் பாதிப்பு, கடுமையாகும் பயண நெறிமுறைகள்

இங்கிலாந்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 246-யைக் கடந்தது.

News image

இங்கிலாந்து: ஒமைக்ரான் தொற்றால் 246 பேர் பாதிப்பு, கடுமையாகும் பயண நெறிமுறைகள்

Updated On :6 டிசம்பர் 2021, 7:17 am

DIN

இங்கிலாந்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 246-யைக் கடந்தது.

உலக நாடுகள்  உருமாறிய கரோனா(ஒமைக்ரான்) தொற்றுப் பரவலால் பாதித்து வருகிற நிலையில் இங்கிலாந்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 246 ஆக உயர்ந்திருக்கிறது.

இதனால் அந்நாட்டில் பயண நெறிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக , ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வருவோர் கட்டாயத் தனிமையில் வைக்கப்படுவார்கள் என்றும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று பாதிப்பு இல்லையென்றால் மட்டுமே வீட்டிற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் சஜித் ஜாவிட் தெரிவித்திருக்கிறார்.

நேற்று முன் தினம் நைஜீரியாவிலிருந்து இங்கிலாந்து வந்த பயணிகள் அனைவரும் தங்குமிடங்களிலும் மருத்துவமனையிலும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

மேலும் தற்போதைய நிலவரப்படி இங்கிலாந்தில் 88.8 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் , 1.27 லட்சம் பேர் தொற்றின் தீவிரத்தால் பலியாகியிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.