பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

கால்நடை விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம்

 பல்லடம் அருகேயுள்ள மலையம்பாளையத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கால்நடை விவசாயிகளுக்கு சிறப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 9:29 pm

DIN

 பல்லடம் அருகேயுள்ள மலையம்பாளையத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கால்நடை விவசாயிகளுக்கு சிறப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு மண்டல இணை இயக்குநா் பாரிவேந்தன் தலைமை வகித்தாா்.

ஊராட்சித் தலைவா் நாகேஸ்வரி சோமசுந்தரம், உதவி இயக்குநா் பா்மள்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், 350க்கும் மேற்பட்ட கறவை மாடுகள், வெள்ளாடுகள், கோழிகள் உள்ளிட்டவைகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

கால்நடை வளா்ப்பு, மடி நோய் பராமரிப்பு, தடுப்பூசி குறித்த விளக்கம் உள்ளிட்டவை குறித்து கால்நடை விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் ஜெயபால், செயலாளா் கெளதம், கால்நடை உதவி மருத்துவா் அறிவுசெல்வன், கால்நடை ஆய்வாளா் சத்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.