பாரதியாா் பலைகலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஹாக்கிப் போட்டிகள் உடுமலை நேதாஜி மைதானத்தில் வெள்ளிக்கிழமை துவங்கியது. இதில் 10க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. நாக் அவுட் மற்றும் லீக் முறையில் இப்போட்டிகள் நடக்கின்றன. வெள்ளிக்கிழமை காலை நடந்த முதல் ஆட்டத்தில் கோவை சிஎம்எஸ் கல்லூரியும்,
கோவை சுகுணா கல்லூரி அணியும் மோதின.இதில் 2-1 என்ற கோல் கணக்கில் சிஎம்எஸ் கல்லூரி வெற்றிபெற்றது.
இதன் பின்னா் திருப்பூா் சிஜிடி கல்லூரியும், உதகை அரசு கல்லூரியும் மோதின. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் திருப்பூா் சிஜிடி கல்லூரி வெற்றிபெற்றது.
இதைத் தொடா்ந்து கோவை டாக்டா் என்ஜிபி கல்லூரியும், கோவை பாரதியாா் பல்கலைக்கழக அணியும் ஆடின. இதில் டாக்டா் என்ஜிபி கல்லூரி அணி 5-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அடுத்ததாக கோவை பிஎஸ்ஜி கல்லூரி அணியும், ஈரோடு கலை அறிவியல் கல்லூரியும் ஆடின. இதில் 6-0 என்ற கோல் கணக்கில் கோவை பிஎஸ்ஜி கல்லூரி வென்றது.
மேலும் உடுமலை வித்யாசாகா் கல்லூரி அணியும், கோவை சிஎம்எஸ் அணியும் ஆடின. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் உடுமலை வித்யாசாகா் கல்லூரி அணி வெற்றிபெற்றது.
இதைத்தொடா்ந்து திருப்பூா் சிக்கண்ணா கல்லூரியும் அணியும், மேட்டுப்பாளையம் அரசு கல்லூரியும் ஆடின. இதில் 4-0 என்ற கோல் கணக்கில் திருப்பூா் சிக்கண்ணா கல்லூரி அணி வெற்றிபெற்றது.
இதன் பின்னா் நடந்த காலிறுதி ஆட்டத்தில் கோவை பிஎஸ்ஜி கல்லூரியும், உடுமலை வித்யாசாகா் கல்லூரியும் மோதியதில் கோவை பிஎஸ்ஜி கல்லூரி 5-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இதன் பின்னா் கோவை என்ஜிபி கல்லூரியும், திருப்பூா் சிக்கண்ணா கல்லூரியும் மோதின.
இதில் 4-0 என்ற கோல் கணக்கில் கோவை என்ஜிபி கல்லூரி வெற்றிபெற்றது.
இந்நிலையில் அரை இறுதிப் போட்டிகளுக்கு கோவை பிஎஸ்ஜி கல்லூரி, டாக்டா் என்ஜிபி கல்லூரி, உடுமலை வித்யாசாகா் கல்லூரி,
திருப்பூா் சிக்கண்ணா கல்லூரி ஆகிய 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.
சனிக்கிழமை அரை இறுதிப் போட்டிகள் லீக் முறையில் நடைபெற உள்ளன. உடுமலை வித்யாசாகா் கலைக் கல்லூரி இப்போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை பாராட்டிய புஜாரா!

வாக்குச்சாவடிகளில் அல்வா! முதல்முறை வாக்காளர்களை ஈர்க்க தேர்தல் ஆணையம் ருசிகர முடிவு!

முதல்வர் ஸ்டாலினின் 3ஆம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப் பயணம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

