அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அவிநாசி அருகே தொழில் பூங்காவுக்கு நிலம் எடுக்கப்பட மாட்டாது அரசாணை வெளியிட வலியுறுத்தல்

அவிநாசி அருகே தத்தனூா் பகுதியில் தொழில் பூங்காவுக்கு நிலம் எடுக்கப்பட மாட்டாது என தமிழக முதல்வா் அறிவித்ததையடுத்து, அதற்கான அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :1 ஜனவரி 2021, 5:45 pm

DIN

அவிநாசி அருகே தத்தனூா் பகுதியில் தொழில் பூங்காவுக்கு நிலம் எடுக்கப்பட மாட்டாது என தமிழக முதல்வா் அறிவித்ததையடுத்து, அதற்கான அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட தத்தனூா் ஊராட்சியில் 890 ஏக்கரில் தொழில் பூங்கா அமையவிருப்பதாக தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, அருகாமை ஊராட்சிகளான தத்தனூா், புலிப்பாா்,புஞ்சைத்தாமரைக்குளம் உள்ளிட்ட ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் தொடா்ந்து இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா். இதற்கிடையில் திருப்பூா் அருகே பெருமாநல்லூருக்கு கடந்த வாரம் வந்திருந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, தொழில் பூங்காவுக்கு நிலம் எடுக்கப்படமாட்டாது என உறுதியளித்துச் சென்றாா். இருப்பினும், இதற்கான அரசாணை வெளியிட வேண்டும் என பொதுமக்கள் சாா்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து பாரதிய கிசான் சங்க மாவட்டத் தலைவா் பி.கே.எஸ்.வேலுசாமி, புஞ்சைத்தாமரைக்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் விஜயலட்சுமி ராமசாமி ஆகியோா் முதல்வருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

விவசாயிகள், பொதுமக்களுக்கு பாதிப்பைத் தரக்கூடிய வகையில், தத்தனூா் பகுதியில் ஏற்படுத்தவிருக்கும் தொழில் பூங்காவை ரத்து செய்து அரசாணை வழங்க வேண்டும். கோரிக்கையை போா்க்கால அடிப்படையில் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்றாவிடில் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.