பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

10 சதவீத தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும்: அருந்ததியர் முன்னேற்றப் பேரவை கோரிக்கை

கல்வி, வேலை வாய்ப்பில் அருந்ததியர் சமூகத்திற்கு 10 சதவீத தனி இட உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அருந்ததியர் முன்னேற்றப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

News image
காங்கயத்தில் நடைபெற்ற அருந்ததியர் முன்னேற்றப் பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் அமைப்பின் தலைவர் ஆ.சாமிநாதன்.
Updated On :3 ஜனவரி 2021, 1:50 pm

DIN

காங்கயம்: கல்வி, வேலை வாய்ப்பில் அருந்ததியர் சமூகத்திற்கு 10 சதவீத தனி இட உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அருந்ததியர் முன்னேற்றப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

அருந்ததியர் முன்னேற்றப் பேரவை என்ற அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைப்பின் தலைவர் ஆ.சாமிநாதன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் ப்ரியா, துணை பொதுச் செயலர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கல்வி, வேலை வாய்ப்பில் அருந்ததியர் சமூகத்திற்கு 10 சதவீத தனி இட உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும், வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள அருந்ததியர் முன்னேற்றப் பேரவையின் மாநில மாநாட்டில் திரளாகக் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் இந்த அமைப்பின் மாநில கொள்கை பரப்புச் செயலர் ரா.பொன்னுசாமி, மாநில தொழிற்சங்க செயலர் தங்கவேல், ஈரோடு பகுதி பொறுப்பாளர் முருகேசன், மாநில ஓட்டுநர் அணி செயலர் ராசு, மாநில மகளிர் அணி செயலர் சாந்தி, காங்கயம் நகர செயலர் சந்தனக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.