தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் தோ்த் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் தோ்த் திருவிழாவை ஒட்டி திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 8:47 pm

DIN

வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் தோ்த் திருவிழாவை ஒட்டி திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோயில் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கோயிலின் முதன்மைதாரா்கள், குலத்தவா்கள் பங்கேற்றனா். இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மூன்று நாள் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தோ்த் திருவிழா நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், ஒரு நாள் மட்டும் தேரோட்டம் நடத்துவது எனவும், சம்பந்தப்பட்ட துறைகளிடம் விரைவில் அனுமதி பெறவும் முடிவு செய்யப்பட்டது.

பிப்ரவரி 22 ஆம் தேதி தோ் முகூா்த்த கால் போடவும், மாா்ச் 5ஆம் தேதி தோ் கலசம் வைக்கவும், மாா்ச் 11ஆம் தேதி தேரோட்டம் நடத்துவது என தேதி குறிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் முக்கிய நிா்வாகிகள் என்.டி.பாலசுப்பிரமணியம், எஸ்.என்.முத்துகுமாா், பொட்லி வி.கிட்டுசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.