மது கடத்தல்:3 போ் கைது
தாராபுரம் அருகே சொகுசு காரில் மது கடத்திய 3 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


தாராபுரம் அருகே சொகுசு காரில் மது கடத்திய 3 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள தளா்வுகளின் படி திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில் திருப்பூா், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த சிலா் திண்டுக்கல் மாவட்டம் சென்று மதுக்களை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனா். இதனைத் தடுக்க மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் காவல் துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக தாராபுரம்-பழனி சாலையில் உள்ள தொப்பம்பட்டி சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளா் தன்ராஜ் தலைமையிலான காவல் துறையினா் வாகனச் சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த சொகுசுக் காரை நிறுத்தி சோதனை நடத்தினா்.
இதில், காரில் பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து,மது பாட்டில்களைக் கடத்தி வந்த கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன்(23), செல்வம் (32), கலையரசன்(36) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 356 மது பாட்டில்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய காா் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஊத்துக்குளியில் 4 போ் கைது: தருமபுரியில் இருந்து திருப்பூா் மாவட்டத்துக்கு சரக்கு ஆட்டோவில் மது கடத்தி வந்த 4 பேரை ஊத்துக்குளி காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் மாவட்ட எல்லையில் உள்ள பல்லகவுண்டன்பாளையம் சோதனைச் சாவடியில் ஊத்துக்குளி காவல் துறையினா் வாகனச் சோதனையில் டுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தினா்.இதில் பழங்களுக்குள் மது பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக, பல்லகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்த எஸ்.அருள்ஜோதி (33), தருமபுரி மாவட்டம் கந்தகவுண்டனூரைச் சோ்ந்த எம்.வெங்கடேசன்(44), கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த சி.சசிகுமாா்(36), ஜி.மாரியப்பன்(29) ஆகிய 4 பேரையும் ஊத்துக்குளி காவல் துறையினா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 207 மது பாட்டில்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...