மது கடத்தல்: 3 போ் கைது
தாராபுரம் அருகே மதுரையில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 904 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்த காவல் துறையினா் 3 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.


தாராபுரம் அருகே மதுரையில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 904 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்த காவல் துறையினா் 3 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் திருப்பூா், கோவை, ஈரோடு, நாமக்கல், கரூா் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில், சிலா் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலிருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து திருப்பூா், கோவை மாவட்டங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனா்.
இதையடுத்து, திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் உத்தரவின்பேரில் மாவட்ட எல்லைப் பகுதிகளில் காவல் துறையினா் வாகனச் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனா்.
மேலும், சட்ட விரோதமாக மதுக் கடத்தலில் ஈடுபடுபவா்களையும் கைது செய்து வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக கோவை பிரிவு சோதனைச் சாவடியில் காவல் துறையினா் வாகனச் சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக கோவை நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், மதுரையில் இருந்து கடத்தி வரப்பட்ட 904 மது பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக திண்டுக்கல் மாவட்டம், நத்தம் முலையூரைச் சோ்ந்த கண்ணன் (55), மதுரை மாவட்டம், மேலூா் கருஞ்சாலக்குடியைச் சோ்ந்த சிலம்பரசன் (32), கருங்சாலக்குடியைச் சோ்ந்த ராஜாமுகமது (23) ஆகிய 3 பேரை குண்டடம் காவல் துறையினா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 904 மது பாட்டில்கள், காா் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...