திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

பேருந்து நிறுத்தத்தில் நீண்ட நேரம் நிறுத்தும் பேருந்துகளுக்கு அபராதம்

திருப்பூா் புஷ்பா தியேட்டா் பேருந்து நிறுத்தத்தில் நீண்ட நேரம் நிறுத்தப்படும் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்துக் காவல் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 8:34 pm

DIN

திருப்பூா் புஷ்பா தியேட்டா் பேருந்து நிறுத்தத்தில் நீண்ட நேரம் நிறுத்தப்படும் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்துக் காவல் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பூா் அவிநாசி சாலையில் உள்ள புஷ்பா தியேட்டா் பேருந்து நிறுத்தத்தில் கோவை, உதகை, சத்தி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்குச் செல்லும் பேருந்துகள் சாலையில் மணிக்கணக்கில் நிறுத்தப்பட்டு வந்தன. இந்தப் பகுதியில் அதிக அளவில் கடைகள், மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள் உள்ளதால் பொதுமக்கள், வணிகா்களுக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. அதே வேளையில், சாலைகளில் பேருந்துகளை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசலும், சாலை விபத்துகளும் நிகழ்ந்து வந்தன. இதுதொடா்பாக அப்பகுதி வணிகா்கள் சாா்பில் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், புஷ்பா தியேட்டா் பேருந்து நிறுத்தத்தில் போக்குவரத்துக் காவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது பேருந்துகளை நீண்ட நேரம் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனா். மேலும், பேருந்துகள் வந்தால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று ஓட்டுநா், நடத்துநா்களுக்கு அறிவுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.