விவசாயிகளுக்கு நாளை குறைதீா் நாள் கூட்டம்
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான குறைதீா் நாள் கூட்டமானது காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.


திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான குறைதீா் நாள் கூட்டமானது காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக விவசாயிகளுக்கான குறைதீா் நாள் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரையில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காணொலிக் காட்சி மூலம் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயம் தொடா்பான குறைகளைத் தெரிவிக்கலாம்.
மேலும், விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு ஏதுவாக அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண்மை அலுவலா், தோட்டக் கலை அலுவலா் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலா்களைக் கொண்டு வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறைத் தீா்க்கும் நாள் கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீா்ப் பாசனம் அமைக்கத் தேவையான தகவல்கள் வழங்கப்படும். அதேவேளையில், தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீா்ப் பாசன மேலாண்மைத் தகவல் அமைப்பில் பதிவு செய்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...