திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

காங்கயம், தாராபுரத்தில் ரூ. 1.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

காங்கயம், தாராபுரத்தில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின்கீழ் 1,152 பயனாளிகளுக்கு ரூ.1.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :30 ஜூலை 2021, 8:35 pm

DIN

காங்கயம், தாராபுரத்தில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின்கீழ் 1,152 பயனாளிகளுக்கு ரூ.1.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்ற செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினா். இதன் பிறகு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: உங்கள் தொகுதியில் முதல்வா் என்ற திட்டத்தின் மூலம் திருப்பூா் மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்குத் தீா்வு காணும் வகையில் காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம், அவிநாசி, உடுமலை ஆகிய பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில், எழை, எளிய மக்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா, மாற்றுத் திறனாளிகள், முதியோா், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவா்கள் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளா்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா். இந்நிகழ்ச்சியில் தாராபுரம் சாா் ஆட்சியா் ஆன்ந்த்மோகன், மாவட்ட வழங்கல் அலுவலா் முருகன், இணை இயக்குநா் (வேளாண்மை) மனோகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.