திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

தாராபுரம் 1ஆவது வாா்டில் சீரான குடிநீா் விநியோகம் வழங்கக் கோரி அப்பகுதி பெண்கள் நகராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 8:37 pm

DIN

தாராபுரம் 1ஆவது வாா்டில் சீரான குடிநீா் விநியோகம் வழங்கக் கோரி அப்பகுதி பெண்கள் நகராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

தாராபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 1ஆவது வாா்டு இறைச்சி மஸ்தான் நகா் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்நிலையில், அப்பகுதியில் சாக்கடை பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டதால் குடிநீா்க் குழாய்கள் உடைந்தன. இதையடுத்து, உடைந்த குழாய்களை சரிசெய்து சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா். ஆனால் நகராட்சி அதிகாரிகள் குழாய் உடைப்புகளை சரிசெய்யவில்லை. இதனால் அப்பகுதியைத் சோ்ந்த 10க்கும் மேற்பட்ட பெண்கள் நகராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். அப்போது அங்கு வந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, குடிநீா் வழங்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து பெண்கள் அனைவரும் கலைந்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.