அவிநாசி அருகே தெக்கலூர் எஸ்சிஎம் வளாகத்தில் ஏ.கே.வி.என் கரோனா சிகிச்சை மையம் திறப்பு

அவிநாசி அருகே தெக்கலூரில் எஸ்சிஎம் வளாகத்தில், ஏ.கே.வி.என் அறக்கட்டளை சார்பில் கரோனா சிகிச்சை மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
அவிநாசி அருகே தெக்கலூர் எஸ்சிஎம் வளாகத்தில் ஏ.கே.வி.என் கரோனா சிகிச்சை மையம் திறப்பு.
அவிநாசி அருகே தெக்கலூர் எஸ்சிஎம் வளாகத்தில் ஏ.கே.வி.என் கரோனா சிகிச்சை மையம் திறப்பு.

அவிநாசி அருகே தெக்கலூரில் எஸ்சிஎம் வளாகத்தில், ஏ.கே.வி.என் அறக்கட்டளை சார்பில் கரோனா சிகிச்சை மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

தெக்கலூர் நல்லிக்கவுண்டம்பாளையம் பிரிவு அருகே உள்ள எஸ்சிஎம் குழு நிறுவன வளாகத்திற்குள் ஏ.கே.வி.என் அறக்கட்டளை சார்பில் ஆக்சிஜன் வசதியுடன் 80 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துடன் அமைக்கப்பட்டுள்ள இம்மையத்தை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். 

மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் க.செல்வராஜ் முன்னிலை வகித்தார். ஏ.கே.வி.என் அறக்கட்டளை மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டி.கே.சந்திரன் சகோரதரர்கள் வரவேற்றனர். இந்த சிகிச்சை மையத்தில் அலோபதி, சித்தா, ஆயுர்வேத, யோகா, இயற்கை மருத்துவம் ஆகியவை ஒருங்கிணைந்து சிறந்த மருத்துவர்களால் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நாள்தோறும் 24 மணி நேரம் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கக் கூடிய இம்மருத்துவமனையை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்தலாம் என சென்னை சில்க்ஸ் குழுமத்தினர் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், அவிநாசி அருகே திருமுருகன், பூண்டியைச் சேர்ந்த வே.ராஜன் என்பவர் கரோனா நிவாரண நிதிக்காக ரூ.12 ஆயிரத்திற்கான கசோலையை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com