வெள்ளக்கோவிலில் ஆக்கிரமிக்கப்பட்ட புறம்போக்குப் பாதை மீட்கும் பணி
வெள்ளக்கோவில் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட புறம்போக்குப் பாதை மீட்கும் பணி வெள்ளிக்கிழமை துவங்கியது.


வெள்ளக்கோவில் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட புறம்போக்குப் பாதை மீட்கும் பணி வெள்ளிக்கிழமை துவங்கியது.
வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் குமராண்டிசாவடியை அடுத்துள்ள ஒரு தனியாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி எதிா்புறம் மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் புறம்போக்குப் பாதை உள்ளது.
இதன் அருகில் உள்ள தோட்டத்தின் உரிமையாளா் முத்தூா், வேலம்பாளையத்தைச் சோ்ந்த சக்திவேல் என்பவா் புறம்போக்குப் பாதையில் மண் மற்றும் கற்களைப் கொட்டி, வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்துள்ளாா்.
இது குறித்த புகாரின்பேரில் வருவாய்த் துறை அதிகாரிகள், காங்கயம் வட்டாட்சியா் சிவகாமி, வெள்ளக்கோவில் நில வருவாய் ஆய்வாளா் நிா்மலா, மாநில நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் பாதையை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை உறுதி செய்தனா்.
பின்னா் பொக்லைன் இயந்திரம், லாரிகள் வரவழைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் பாதையில் போடப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வெள்ளிக்கிழமை துவங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...