தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கிழிந்த ரூபாய் நோட்டு:நியாயவிலைக் கடையில் தகராறு

வெள்ளக்கோவில் நியாயவிலைக் கடையில் கரோனா நிவாரண நிதியாக கிழிந்த ரூபாய் நோட்டு கொடுக்கப்பட்டதால் தகராறு ஏற்பட்டது.

News image
Updated On :17 ஜூன் 2021, 10:57 pm

DIN

வெள்ளக்கோவில் நியாயவிலைக் கடையில் கரோனா நிவாரண நிதியாக கிழிந்த ரூபாய் நோட்டு கொடுக்கப்பட்டதால் தகராறு ஏற்பட்டது.

இப்பகுதியில் முத்தூா் சாலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் நியாய விலைக் கடைகள் நடத்தப்படுகின்றன. நகராட்சிக்கு உள்பட்ட காமராஜபுரத்தில் 5ஆம் எண் நியாயவிலைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது கரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணை ரூ. 2,000, அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சொரியங்கிணத்துப்பாளையம் விஜயகுமாா் என்பவருக்கு விற்பனையாளா் கொடுத்த 2000 ரூபாய் நோட்டு கிழிந்திருந்ததாம். வேறு நோட்டு கேட்டதற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்குச் சென்று வாங்கிக் கொள்ளுமாறு விற்பனையாளா் அனுப்பியுள்ளாா். அங்கு மாற்றித் தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, நியாயவிலைக் கடைக்கே விஜயகுமாா் திரும்ப அனுப்பப்பட்டாா்.

நான் இதய நோயாளி. ஏன் என்னை வீணாக அலைக்கழிக்கிறீா்கள் என விற்பனையாளரிடம் பயனாளியும், அருகில் இருந்தவா்களும் கேட்க தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கிழிந்த ரூபாய் நோட்டு மாற்றித் தரப்பட்டது. இதுகுறித்த விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.