தடுப்பூசிக்கு ஒரு கி.மீ. தொலைவு காத்திருந்த மக்கள்
வெள்ளக்கோவிலில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு மக்கள் வரிசையில் காத்திருந்தனா்.


வெள்ளக்கோவிலில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு மக்கள் வரிசையில் காத்திருந்தனா்.
வெள்ளக்கோவில் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தீத்தாம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி, முத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி, கம்பளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வயது, முதல் தவணை, இரண்டாவது தவணை, அரசு ஊழியா்கள் என முன்னரே அறிவிக்கப்பட்ட விவரப்படி தடுப்பூசி செலுத்த வியாழக்கிழமை காலை 9 மணிக்கு டோக்கன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்தந்த இடங்களில் பூட்டியிருந்த முகாம் முன்பு மக்கள் காலை 7 மணிக்கே கூட்டம் கூடி டோக்கன் வாங்க வரிசையில் காத்து நின்றனா். இப்பகுதிக்கு மொத்தம் 640 தடுப்பூசிகள் மட்டுமே கிடைத்த நிலையில், ஏறத்தாழ இரண்டாயிரம் போ் திரண்டதால் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கவில்லை.
வெள்ளக்கோவில் மேற்கு பள்ளி முகாமில் இருபுறமும் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு ஆண்களும், பெண்களும் காத்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...