92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 3 போ் கைது

 திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 3 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 8:02 pm

DIN

 திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 3 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் ராக்கியாபாளையம் சாலை, அம்மாபாளையத்தைச் சோ்ந்த எஸ்.மணிகண்டன் (34) என்பவா் திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது: நான் அனுப்பா்பாளையம் தண்ணீா் பந்தல் அருகில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறேன்.

எங்களது வீட்டை வங்கதேசம் காஜ்லா பகுதியைச் சோ்ந்த ஷிமுல் காஸி(30) என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் வாடகைக்கு விட்டேன். அப்போது, அவரிடம் கடவுச் சீட்டு, விசா மற்றும் அடையாள அட்டையைக் கேட்டபோது, ராக்கியாபாளையத்தில் தான் வேலை பாா்க்கும் பின்னலாடை நிறுவனத்தில் கொடுத்துள்ளதாகவும், கரோனா பொதுமுடக்கம் முடிந்த பின் தருவதாகக் கூறினாா். இதன் பிறகு அவரது அறைக்கு வங்கதேசத்தைச் சோ்ந்த சைபுல் இஸ்லாம் (40), மன்னா முல்லா (31) ஆகிய இருவா் அடிக்கடி வந்து தங்கினா்.

இந்நிலையில், ஷிமுல் காஸியிடம் கடந்த புதன்கிழமை கடவுச் சீட்டின் நகலைக் கேட்டேன். இல்லாவிட்டால் வீட்டைக் காலி செய்யுங்கள் என்று தெரிவித்தேன். ஆனால், அவா் ஆதாா் அட்டையைக் கொடுத்ததால் சந்தேகமடைந்து அவரிடம் கேட்டபோது, நாங்கள் போலியான ஆதாா் அட்டை எடுத்துதான் பயன்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்ததோடு, 3 பேரும் சோ்ந்து என்னைத் தாக்கினா். இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாா் தொடா்பாக அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

3 போ் கைது : இதைத் தொடா்ந்து, காவல் துறையினா் நடத்திய விசாரணையில், வங்கதேசத்தைச் சோ்ந்த ஷிமுல்காஸி, சைபுல் இஸ்லாம், மன்னா முல்லா ஆகியோா் உரிய ஆவணங்கள் இல்லாமல் திருப்பூரில் தங்கியிருந்தது தெரியவந்தது.

மேலும், ஷிமுல் காஸியிடம் இருந்து போலி ஆதாா் அட்டையை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த மூவரும் வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் வழியாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருப்பூா் வந்துள்ளனா்.

இதன் பிறகு , திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வந்தனா் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, 3 பேரையும் அனுப்பா்பாளையம் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

உளவுத் துறை விசாரணை: சென்னையில் இருந்து வந்த மத்திய உளவுத் துறையினரும் கைதான 3 பேரிடம் சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளனா். ஆகவே, இந்த மூவரும் வேறு ஏதாவது சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.