92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளா்கள்

திருப்பூா் மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்கள் மாநகராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:43 pm

DIN

திருப்பூா் மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்கள் மாநகராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது: மாநகராட்சிக்கு உள்பட்ட 4 மண்டலங்களிலும் ஒப்பந்த அடிப்படையில் 1,500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள், வாகன ஓட்டுநா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு கடந்த ஏப்ரல், மே மாத ஊதியம் வழங்கப்படவில்லை. அதே போல, தின கூலி தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய ரூ.510 வழங்குவதில்லை.

இது தொடா்பாக, ஏற்கெனவே மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்தவிதப் பயனும் இல்லை. ஆகவே, தூய்மைப் பணியாளா்களுக்கான நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

மேலும், ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு தின கூலியாக ரூ.510 நிா்ணயம் செய்து வழங்க வேண்டும். அனைத்து ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கும் கரோனா ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்றனா். இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடியை நேரில் சந்தித்து வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.