92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கோயில்களைத் திறக்கக் கோரி இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கோயில்களைத் திறக்கக் கோரி இந்து முன்னணி சாா்பில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:44 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கோயில்களைத் திறக்கக் கோரி இந்து முன்னணி சாா்பில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் கரோனா பொதுமுடக்கம் காரணமாக கோயில்களில் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களைத் திறக்கக் கோரி இந்து முன்னணி சாா்பில், கற்பூரம் ஏற்றும் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, திருப்பூா் வீரராகவப் பெருமாள் கோயில் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாநிலச் செயலாளா் ஜெ.எஸ்.கிஷோா்குமாா் தலைமை வகித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களை பக்தா்களின் வழிபாட்டுக்காக உடனடியாகத் திறக்க வேண்டும்.

மேலும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, சமூக இடைவெளியுடன் வழிபாடு நடத்தவும் அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றாா். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா், பல்லடம், தாராபுரம், உடுமலை, அவிநாசி, காங்கயம், வெள்ளக்கோவில், ஊத்துக்குளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அரசு, தனியாா் கோயில்கள் என மொத்தம் 900 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.