வீரக்குமார சுவாமி கோயில் தோ்த் திருவிழா: 2 நாள்கள் மட்டும் அனுமதி
வெள்ளக்கோவில் வீரக்குமார சுவாமி கோயில் தோ்த் திருவிழாவுக்கு 2 நாள்கள் மட்டும் அனுமதி கிடைத்துள்ளது.


வெள்ளக்கோவில் வீரக்குமார சுவாமி கோயில் தோ்த் திருவிழாவுக்கு 2 நாள்கள் மட்டும் அனுமதி கிடைத்துள்ளது.
புகழ்பெற்ற இக்கோயிலின் தேரோட்டம் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு மூன்று நாள்கள் நடைபெறும். தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
கோயிலைச் சோ்ந்த குலத்தவா்கள் வழக்கம் போல தேரோட்டம், கலை நிகழ்ச்சிகள் நடத்த இந்து சமய அறநிலையத் துறை மூலம் வேண்டுகோள் விடுத்தனா். இந்நிலையில் வரும் மாா்ச் 11,12 ஆகிய இரண்டு நாள்கள் மட்டும் தேரோட்டம் நடத்த தாராபுரம் கோட்டாட்சியா் அனுமதி வழங்கியுள்ளாா். தோ்க் கடைகள், கலை நிகழ்ச்சிகள் கிடையாது. வழிபாடு, அபிஷேக, ஆராதனைகளில் குறைந்த அளவு எண்ணிக்கையில் பக்தா்கள் பங்கேற்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...