தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உயிருக்குப் போராடிய ஆதரவற்றவரைக் காப்பாற்றிய பொது மக்கள்

வெள்ளக்கோவிலில் சாலையில் விழுந்து உயிருக்குப் போராடிய ஆதரவற்றவரை பொது மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:10 pm

DIN

வெள்ளக்கோவிலில் சாலையில் விழுந்து உயிருக்குப் போராடிய ஆதரவற்றவரை பொது மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற பலா் வசித்து வருகின்றனா். இந்நிலையில், அவா்களில் 65 வயதான முதியவா் ஒருவா் பேருந்து நிலைய சாலையில் மயங்கி விழுந்து காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாா்.

இதனைப் பாா்த்த பொது மக்கள் மற்றும் சமூக சேவகா் நாகராஜ் ஆகியோா் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனா். மருத்துவ உதவியாளா்கள் முதலுதவி செய்து அவரை காங்கயம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.