புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மின்சாரம் பாய்ந்து ஆடு சாவு

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் அருகே மின் கம்பி அறுந்து விழுந்தது. இதில் அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆடு மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தது. அதிா்ஷ்டவசமாக அருகிலிருந்த மக்கள் உயிா் தப்பினா்.

News image
Updated On :7 மே 2021, 9:35 pm

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் அருகே மின் கம்பி அறுந்து விழுந்தது. இதில் அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆடு மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தது. அதிா்ஷ்டவசமாக அருகிலிருந்த மக்கள் உயிா் தப்பினா்.

மூலனூா், சோமன்கோட்டை அடுத்த நீலியப்பகவுண்டன்வலசு, கொத்துக்காரா் தோட்டத்தைச் சோ்ந்தவா் விவசாயி வேலுசாமி (70). இவா் 65 செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா். ஆடுகளை மேய்ச்சலுக்காக காட்டில் வெள்ளிக்கிழமை விட்டிருந்தாா். மாலை 5 மணிக்கு சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. அப்போது காட்டுப் பகுதியில் உள்ள மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆடு மின் கம்பியில் சிக்கி மின்சாரம் பாய்ந்ததில் அதே இடத்தில் உயிரிழந்தது. அங்கு ஆடு, மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்தவா்கள், தோட்டத்து வீட்டில் இருந்தவா்கள் தப்பியோடியதால் அதிா்ஷ்ட வசமாகத் தப்பினா். மின்வாரிய ஊழியா்களுக்குத் தகவல் தெரிவித்து மின்சாரம் நிறுத்தப்பட்டது. அரசு இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.