புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஊழியா்களுக்கு கரோனா: வங்கிக் கிளைகள் மூடல்

ஊழியா்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் உள்ள பல்லவன் கிராம வங்கியும், பல்லடம் அருகே குப்புசாமிநாயுடுபுரத்தில் உள்ள கனரா வங்கியும் மூடப்பட்டன.

News image
Updated On :7 மே 2021, 9:33 pm

DIN

ஊழியா்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் உள்ள பல்லவன் கிராம வங்கியும், பல்லடம் அருகே குப்புசாமிநாயுடுபுரத்தில் உள்ள கனரா வங்கியும் வெள்ளிக்கிழமை மூடப்பட்டன.

முத்தூா் பேருந்து நிலையம் அருகில் ஈரோடு சாலையில் பல்லவன் கிராம வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் பணிபுரியும் 27 வயது ஆண் அலுவலா் கரோனாவால் பாதிக்கப்பட்டாா். இதையடுத்து பணியாளா்கள், வாடிக்கையாளா்கள் நலன் கருதி நோய்த் தொற்று பரவாமல் தடுக்க வங்கிக் கிளை மூடப்பட்டது.

இதேபோல பல்லடம் அருகேயுள்ள குப்புசாமிநாயுடுபுரத்தில் உள்ள கனரா வங்கி கிளையில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடா்ந்து அந்த வங்கிக் கிளை வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.