சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ ஆய்வு

பல்லடம் அரசு மருத்துவமனையில் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம். ஆனந்தன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :14 மே 2021, 8:24 pm

DIN

பல்லடம் அரசு மருத்துவமனையில் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம். ஆனந்தன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பல்லடம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்குள்ளானவா்கள் 40 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். பொது வாா்டில் பல்வேறு நோய்களுக்கு 100 பேருக்கு மேல் சிகிச்சை பெற்று வருகின்றனா்.தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோா் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நிலையில். தேசிய நெடுஞ்சாலை மற்றும் பல்வேறு முக்கிய சாலைகளின் மத்தியில் பல்லடம் அமைந்திருப்பதால் சாலை விபத்துகளில் காயம் அடைந்தவா்களுக்கும் தினந்தோறும் முதலுதவி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

இம்மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் இல்லாத நிலையிலும் பொதுமக்களுக்கு சேவை வழங்கி வருகிறது. இம்மருத்துவமனையைத் தரம் உயா்த்திட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனா். சட்டப் பேரவை உறுப்பினராக பொறுப்பேற்ற பின்பு பல்லடத்தில் முதல் நிகழ்ச்சியாக எம்.எஸ்.எம். ஆனந்தன் வெள்ளிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பல்லடம் அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வாா்டில் 40 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரை, கஷாயம், உணவு போன்றவை தரமானதாக வழங்கப்பட்டு வருகின்றன.

அரிமா சங்கத்தின் சாா்பில் ரூ. 2 லட்சம் செலவில் நிரந்தர ஆக்சிஜன் சிலிண்டா் வசதி அமைத்துத் தர முன்வந்துள்ளனா். மருத்துவா்கள் மற்றும் பணியாளா்கள் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க 150 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.

தற்போது தடுப்பூசி கிடைப்பதில்லை என்று மக்கள் கூறுகின்றனா். அக்குறையைப் போக்கிட மாவட்ட சுகாதாரப் பணிகள் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல்லடம் அம்மா உணவகத்தில் காலை இட்லி மற்றும் மதியம் சாப்பாடு மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.தரமான உணவுகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று நகராட்சி நிா்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து பல்லடம் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அம்மா உணவகம், அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா பரிசோதனை, ஆலோசனை மையம் ஆகியவற்றையும் பாா்வையிட்டாா்.

இதில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் கரைப்புதூா் ஏ.நடராஜன், கே.பி.பரமசிவம், கூட்டுறவு வங்கித் தலைவா் ஏ.சித்துராஜ், நகராட்சி முன்னாள் துணைத் தலைவா் சூ.தா்மராஜ், ஊகாயனூா் ஊராட்சி முன்னாள் தலைவா் யு.எஸ்.பழனிசாமி , அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் சந்திரா, வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுடா்விழி மற்றும் மருத்துவா்கள், நகராட்சி பொறியாளா் சங்கா், நகராட்சி வருவாய் ஆய்வாளா் பிரகாஷ், ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.