திருப்பூரில் 56 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் சிகிச்சை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 

திருப்பூர் மாவட்டத்தில் பருவமழை மற்றும் பேரிடர் காலத்தில் பொதுமக்களின் சிகிச்சைக்காக 56 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்து
திருப்பூரில் 56 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் சிகிச்சை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 
திருப்பூரில் 56 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் சிகிச்சை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பருவமழை மற்றும் பேரிடர் காலத்தில் பொதுமக்களின் சிகிச்சைக்காக 56 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பருவமழை மற்றும் பேரிடர் கால நடமாடும் மருத்துவ வாகனங்களை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் சனிக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தனர். 

இதன் பிறகு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் பருவமழையினால் ஏற்படும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, சேற்றுப்புண் மற்றும்  பிற நோய்களுக்காக சிகிச்சை அளிக்கும் வகையில் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் 56 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலமாக முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நடமாடும் குழுக்கள் மூலமாக காலையில் 56 முகாம்களும், பிற்பகலில் 567 முகாம்கள் என நாள் ஒன்றுக்கு மொத்தம் 112 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முகாம்களின் நோக்கங்கள் சளி மற்றும் காய்ச்சல் கண்டறிதல், காய்ச்சல் கண்டறியப்பட்டவர்களின் ரத்த மாதிரி சேகரித்தல் மற்றும் மருந்து வழங்குதல், உயர்சிகிச்சைக்கு பரிந்துரை செய்தல், பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல், கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல்,சுத்தமான குளோரின் கலந்த குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்தல் ஆகியவையாகும். மேலும்,கரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறிஉள்ளவர்களைக் இந்த முகாம்களின் மூலமாகக் கண்டறிந்து சளி, மாதிரிகளும் சேகரிக்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலமாக கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் தற்போது வரையில் 10,880 பேர் பயனடைந்துள்ளனர் என்றார். 

இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடமாடும் மருத்துவ வாகனங்களை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடக்கிவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com