தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பள்ளிகளில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்த வேண்டும்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்த வேண்டும் என்று குழந்தை உரிமை ஆணையத்தின் தலைவா் சரஸ்வதி ரங்கசாமி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 8:49 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்த வேண்டும் என்று குழந்தை உரிமை ஆணையத்தின் தலைவா் சரஸ்வதி ரங்கசாமி தெரிவித்துள்ளாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு முன்னிலை வகித்த தமிழ்நாடு குழந்தை உரிமை ஆணையத்தின் தலைவா் சரஸ்வதி ரங்கசாமி பேசியதாவது: தமிழகத்தில் நகா்ப்புறங்களில் மாநகராட்சி மண்டல அளவிலும், நகராட்சி, பேரூராட்சி அளவிலும் குழந்தை பாதுகாப்பு குழுக்களை அமைத்து அவற்றை வலுப்படுத்த வேண்டும். அதேபோல, கிராமங்களில் மட்டுமின்றி வட்டார அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களையும், மாவட்ட குழந்தை பாதுகாப்பு குழுவையும் வலுப்படுத்த வேண்டும். மாவட்டத்தில் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் என மொத்தம் 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளித்து குழந்தைகள் பாதுகாப்பில் முன்னோடி மாவட்டமாகத் திகழ வேண்டும். மேலும், பள்ளிகளில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களையும் வலுப்படுத்த வேண்டும் என்றாா். இக்கூட்டத்தில், தமிழ்நாடு குழந்தை உரிமை ஆணையத்தின் உறுப்பினா்கள் மருத்துவா் வி.ராமராஜ், மருத்துவா் மல்லிகை, மருத்துவா் சரண்யா ஜெயகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சாகுல்ஹமீது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் செல்வம், மாவட்ட சமூக நல அலுவலா் அம்பிகா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.