திருப்பூர் : சேவூர் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த கார்
சேவூர் அருகே குட்டகம் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


சேவூர் அருகே குட்டகம் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடிரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம் சேவூர் சந்தையப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அவிநாசியப்பன் மகன் சண்முகம்(50).

இவர் இன்று (வெள்ளிக்கிழமை) கிளாகுளம் குட்டகம் சாலையில் தனது காரில் சேவூர் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். ராக்கம்பாளையம் பிரிவு அருகே சென்ற போது, எதிர்பாராத விதமாக எரிவாயு பொருத்தியிருந்த இவரது கார் திடிரென தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்த சண்முகம் காரை விட்டு இறங்கி உயிர் தப்பினார்.இருப்பினும் கார் முழுவதும் தீப்பிடித்து எரியத் துவங்கியது. தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதாரமானது. இது குறித்து சேவூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...