பல்லடத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் ஆய்வு
By DIN | Published On : 21st August 2021 01:50 AM | Last Updated : 21st August 2021 01:50 AM | அ+அ அ- |

பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள 1, 086 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரி பாா்க்கும் பணி அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் பல்லடம், உடுமலை, தாராபுரம், காங்கயம்,வெள்ளக்கோவில் ஆகிய 5 நகராட்சிகளில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புத் தோ்தலுக்கு பயன்படுத்த 1, 086 மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு பாதுகாப்பான அறையில் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் எஸ். வினீத் உத்தரவின் பேரில் பல்லடம் நகராட்சி ஆணையா் விநாயகம், வருவாய் ஆய்வாளா் பிரகாஷ், சுகாதார ஆய்வாளா் சிவகுமாா், பணி மேற்பாா்வையாளா் ராசுக்குட்டி, நகராட்சி அலுவலா்கள், அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை அறை திறக்கப்பட்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கப்பட்டு மீண்டும் பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டது.