கரோனா தடுப்பூசி முகாம்: காங்கயம் பகுதியில் 4,100 தடுப்பூசி செலுத்த இலக்கு

கரோனா தடுப்பூசி முகாமில், காங்கயம் பகுதியில் 28 மையங்களில் 4,100 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

காங்கயம்: ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நடைபெறவுள்ள மாபெரும் கரோனா தடுப்பூசி முகாமில், காங்கயம் பகுதியில் 28 மையங்களில் 4,100 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) 631 மையங்களில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 200 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, காங்கயம் ஒன்றியம் மற்றும் நகரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 25 மையங்கள் மற்றும் 3 நடமாடும் மையங்கள் மூலம் மொத்தம் 4,100 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம்: இதன்படி, காங்கயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், கல்லேரி, மறவபாளையம், படியூர், சிவன்மலை ஆகிய கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளிலும், சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், சிவன்மலை மினி க்ளினிக் மற்றும் வாகனங்கள் மூலம் 2 நடமாடும் மையங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

நத்தக்காடையூர் ஆரம்ப சுகாதார நிலையம்: நத்தக்காடையூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், நத்தக்காடையூர், மருதுறை, பரஞ்சேர்வழி, பழையகோட்டை ஆகிய கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மையங்கள், நத்தக்காடையூர் ஆரம்ப சுகாதார நிலையம், பழையகோட்டை மினி க்ளினிக் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

பச்சாபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம்: பச்சாபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பாப்பினி, வீரணம்பாளையம், பொத்தியபாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளிலும், பச்சாபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஒரு நடமாடும் வாகனம் மூலமும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

காங்கயம்-சத்யா நகர் ஆரம்ப சுகாதார நிலையம்: காங்கயம், சத்யா நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட புலிக்கல்மேடு, புலிமாநகர், களிமேடு ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி மையங்கள் மற்றும் சத்யாநகர் ஆரமப சுகாதார நிலையம், காங்கயம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசியி செலுத்திக் கொள்ள வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com