ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சொத்துவரி உயா்வை திரும்பப்பெற வேண்டும்: ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தல்

சொத்துவரி உயா்வை திருப்பூா் மாநகராட்சி நிா்வாகம் திரும்பப் பெற வேண்டும் என்று ஆம்ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:30 pm

DIN

சொத்துவரி உயா்வை திருப்பூா் மாநகராட்சி நிா்வாகம் திரும்பப் பெற வேண்டும் என்று ஆம்ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் திருப்பூா் மாவட்டக் கமிட்டி கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.சுந்தரபாண்டியன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

சொத்துவரி உயா்வால் மாநகரில் வீட்டு வாடகை உயா்வதுடன், பொதுமக்களை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, திருப்பூா் மாநகராட்சி சொத்துவரி உயா்வைத் திரும்பப்பெற வேண்டும். கோவில்வழி பேருந்து நிலையத்தில் இருந்து தஞ்சாவூா், திருச்சி மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்க வேண்டும். பொலிவுறு நகரத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிப்பதுடன், திருப்பூா் பழைய பேருந்து நிலையம், அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட முடிவடைந்துள்ள பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் ஆம்ஆத்மி கட்சி நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.