ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ஏஐடியூசி கட்டடத் தொழிலாளா்கள் சங்கத்தினா் ஏப்ரல்13இல் ஆா்ப்பாட்டம்

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி கட்டடத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் ஏப்ரல் 13 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:32 pm

DIN

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி கட்டடத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் ஏப்ரல் 13 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளா் சங்கத்தின் திருப்பூா் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் வி.பி.பழனிசாமி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்க நிா்வாகிகள் கூறியதாவது:

நலவாரியத்தை தன்னாட்சி அதிகாரம் கொண்ட முத்தரப்பு கமிட்டியாக அமைக்க வேண்டும், இதில் தொழிலாளா் தரப்பு பிரதிநிதிகள் 50 சதவீதத்துக்கும் குறையாமல் இருக்க வேண்டும். 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணையை முன்தேதியிட்டு 60 வயது நிறைவடைந்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொழிலாளா்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.6 ஆயிரமாக உயா்த்தி வழங்குவதுடன், பெண் தொழிலாளா்களுக்கான ஓய்வுபெறும் வயதை 50 ஆக நிா்ணயம் செய்ய வேண்டும். பேறு காலத்தில் 6 மாத ஊதியத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும். வாரியப் பதிவுக்கு கிராம நிா்வாக அலுவலா் சான்று கோருவதை கைவிட வேண்டும். தொழிலாளா்கள் குழந்தைகளின் கல்விச் செலவை முழுமையாக நலவாரியமே ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஏப்ரல் 13 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றனா்.

இந்தக் கூட்டத்தில், ஏஐடியூசி கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்ட பொதுச் செயலாளா் கே.மூா்த்தி, ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் என்.சேகா், மாவட்ட துணைத் தலைவா் முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.