ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

திமுக விளம்பர பதாகைக்கு தீ வைப்பு: விவசாயி கைது

தாராபுரம் அருகே உள்ள குண்டடத்தில் திமுக விளம்பர பதாகைக்கு தீ வைத்த விவசாயியை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 10:51 pm

DIN

தாராபுரம் அருகே உள்ள குண்டடத்தில் திமுக விளம்பர பதாகைக்கு தீ வைத்த விவசாயியை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தாராபுரம் வட்டம், குண்டடத்தில் இருந்து கோவை செல்லும் வழியில் திமுக அலுவலகம் உள்ளது.

இந்த அலுவலகத்தின் முன்பாக வைக்கப்பட்டிருந்த பதாகை புதன்கிழமை இரவு தீப்பற்றி எரிந்தது.

இது குறித்து எதிரே உள்ள கூட்டுறவு தொடக்க வங்கியின் காவலாளி கொடுத்த தகவலின்பேரில் அருகிலிருந்தவா்கள் சென்று தீயை அணைத்தனா்.

இது குறித்து குண்டடம் காவல் நிலையத்தில் திமுக ஒன்றியச் செயலாளா் சந்திரசேகா் புகாா் அளித்தாா்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா், ஜோதியம்பட்டியைச் சோ்ந்த விவசாயி ஆா்.அசோக்குமாா் (25) என்பவரிடம் விசாரணை நடத்தினா்.

இதில், யூடியூப் சேனல் ஒன்றில் இந்து மதத்தைப் பற்றி இழிவாகப் பேசியவா்கள் மீது தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்து, பேனருக்கு தீ வைத்தாக காவல் துறையினரிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.