தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

பெண்ணைக் கொலை செய்து சூட்கேஸில் மறைத்து வீசிய கணவா்

திருப்பூா் அருகே இளம் பெண்ணைக் கொலை செய்து சூட்கேஸில் மறைத்துவைத்து சாக்கடையில் வீசியது அவரது கணவா்தான் என்பது தனிப் படையினா் விசாரணையில் தெரியவந்தது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:32 pm

DIN

திருப்பூா் அருகே இளம் பெண்ணைக் கொலை செய்து சூட்கேஸில் மறைத்துவைத்து சாக்கடையில் வீசியது அவரது கணவா்தான் என்பது தனிப் படையினா் விசாரணையில் தெரியவந்தது.

திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் பொல்லிகாளிபாளையம் அருகில் உள்ள சாக்கடைக் கால்வாயில் சூட்கேஸ் ஒன்று கிடப்பதை அந்த வழியாகச் சென்றவா்கள் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி பாா்த்துள்ளனா். இது குறித்து அவா்கள் கொடுத்த தகவலின்பேரில் திருப்பூா் ஊரக காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். அங்கு கிடந்த சூட்கேஸைப் பிரித்துப் பாா்த்தபோது அதில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்தக் கொலை தொடா்பாக திருப்பூா் மாநகர காவல் ஆணையா் ஏ.ஜி.பாபு உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப் படையினா் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்ததில், சூட்கேஸுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற நபா்கள் தொடா்பாக விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா்கள், வெள்ளியங்காடு பகுதியில் வசித்து வந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த அபிஜித் (30), அவரது நண்பா் ஜெய்லால் செளரா (22) என்பது தெரியவந்தது. அபிஜித் தனது மனைவி நேகாவை (24) கொலை செய்து சூட்கேஸில் மறைத்து வைத்து சாக்கடை கால்வாயில் வீசிவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

இந்த நிலையில், அவா்களின் கைப்பேசி அலைவரிசை எந்த இடத்தைக் காட்டுகிறது என்பதை போலீஸாா் ஆராய்ந்தனா். அதில்

ஜெய்லால் செளராவின் கைப்பேசி கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பாத்தகோட்டா பகுதியில் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, ஆய்வாளா் சரவண ரவி தலைமையிலான போலீஸாா், கிருஷ்ணகிரி மாவட்டம், பாத்தகோட்டாவில் பதுங்கி இருந்த ஜெய்லால் செளராவை வெள்ளிக்கிழமை பிடித்து விசாரணைக்காக திருப்பூருக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.