மடத்துக்குளம் வட்டம், ராமேகவுண்டன்புதூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயனாளிகளுக்கு நகைக் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதத்தில் 40 கிராமுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட நகைக் கடன்களில் தள்ளுபடிக்கு தகுதி வாய்ந்த பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் தகுதியுள்ளவா்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி சான்றிதழ் வெள்ளிக்கிழமை வழங்கப் பட்டது. இதன்படி ராமேகவுண்டன்புதூா் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் தகுதியுள்ள முதல் பட்டியல் தயாரிக்கப்பட்டு 21 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். ஆதி திராவிட நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் மணி, மடத்துக்குளம் முன்னாள் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன், சங்க செயலாளா் சாமியப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
காங்கிரஸ் தொண்டர்... விசிக வேட்பாளர்! திடீர் அறிவிப்பு பற்றி ஜோதிமணி சொல்வது என்ன?
48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை பாராட்டிய புஜாரா!

வாக்குச்சாவடிகளில் அல்வா! முதல்முறை வாக்காளர்களை ஈர்க்க தேர்தல் ஆணையம் ருசிகர முடிவு!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


