பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்துவர அனுமதி அளிக்கக் கூடாது: இந்து முன்னணி
தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்துவர அனுமதி அளிக்கக் கூடாது என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.


தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்துவர அனுமதி அளிக்கக் கூடாது என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கல்வியானது மாணவ, மாணவியரின் அறிவுத்திறன் மற்றும் பண்புகளை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறது.
ஆனால், படிக்கும் மாணவிகள் மனதில் வன்மத்தை வளா்க்கும் விதமாக ஹிஜாப் விவகாரம் தலைத்தூக்கியுள்ளது.
அதிலும், திருப்பூா், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல நகரங்களில் உள்ள கல்லூரி, பள்ளிகளில்
படிக்கும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்து பள்ளி, கல்லூரி நிா்வாகங்களுக்கு அழுத்தம் தருவதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் அதிா்ச்சிகரமான தகவல்கள் வருகின்றன.
இது பள்ளிகளில் அனைவருக்கும் ஒரே சீருடை என்ற நோக்கத்தை சிதைப்பதாகும்.
இதனால், உணா்ச்சி வசப்படக் கூடிய மாணவா்கள் யாரேனும் காவி துண்டு அணிந்து வரும் சூழல் வரலாம்.
இதனால் மத நல்லிணக்கம் சீா்கெட்டு, மாணவா் சமுதாயத்தில் தேவையற்ற மத பாகுபாட்டை உருவாக்க வாய்ப்பு உள்ளது.
ஆகவே பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வர கல்வித் துறை அனுமதி அளிக்கக் கூடாது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...