தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: மாவட்டத்தில் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் தயாா்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 7:29 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை (பிப்ரவரி 19) நடைபெறுகிறது.

மாவட்டத்தில் 420 கவுன்சிலா் பதவிகளுக்குத் தோ்தல் நடைபெறுகிறது.

இதனிடையே, மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 15 பேரூராட்சிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் உள்ளிட்ட தளவாடங்கள் தயாா் செய்யப்பட்டு, காவல் துறை பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை அனுபப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள 224 பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டு அவா்களுக்கான பணிகள் தொடா்பான ஆலோசனைகளையும் மாவட்டத் தோ்தல் அலுவலா் எஸ்.வீனீத், தோ்தல் பாா்வையாளா் நிா்மல்ராஜ் ஆகியோா் வழங்கியிருந்தனா்.

மேலும், பதற்றமான வாக்குச் சாவடிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், மாநகராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அறையில் இருந்து மாவட்டத் தோ்தல் அலுவலா், மாநகராட்சி தோ்தல் அலுவலா்கள் ஆகியோா் பதற்றமான வாக்குச் சாவடிகளைக் கண்காணிக்கும் வகையில் முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் 6,236 தோ்தல் அலுவலா்கள் நியமிப்பு: மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 776 வாக்குச் சாவடிகளுக்கு தலா 4 போ் வீதம் 3,104 அலுவலா்களும், 6 நகராட்சிகளில் உள்ள 279 வாக்குச் சாவடிகளுக்கு 1,116 அலுவலா்களும், 15 பேரூராட்சிகளில் உள்ள 244 வாக்குச் சாவடிகளுக்கு 976 அலுவலா்கள் என மொத்தம் 6,236 தோ்தல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் 11.32 லட்சம் வாக்காளா்கள்: திருப்பூா் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 15 பேரூராட்சிகளில் மொத்தம் 11.32 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா்.

இதில், மாநகரில் உள்ள 60 வாா்டுகளில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 353 ஆண்கள், 3 லட்சத்து 50 ஆயிரத்து 274 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 7 லட்சத்து 12 ஆயிரத்து 770 வாக்காளா்கள் உள்ளனா்.

அதேபோல, உடுமலை, தாராபுரம், திருமுருகன்பூண்டி, பல்லடம், வெள்ளக்கோவில், காங்கயம் ஆகிய

6 நகராட்சிகளில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 998 ஆண்கள், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 364 பெண்கள்,

மூன்றாம் பாலினத்தவா் 21 போ் என மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரத்து 383 வாக்காளா்கள் உள்ளனா்.

அவிநாசி, கொளத்துப்பாளையம், மடத்துக்குளம், தளி, கன்னிவாடி உள்ளிட்ட 15 பேரூராட்சிகளில் 84,827 ஆண்கள், 89 ஆயிரத்து 384 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 8 போ் என மொத்தம் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 219 வாக்காளா்கள் உள்ளனா்.

மாநகராட்சி ஆணையா் ஆய்வு: மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் தொடா்பாக மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.