தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

தாராபுரத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் தண்டனை விதித்தது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 7:27 pm

DIN

தாராபுரத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் தண்டனை விதித்தது.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் வசித்து வந்த 13 வயது சிறுமி காணாமல் போனதாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, தாராபுரம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், தாராபுரத்தைச் சோ்ந்த பிரகாஷ் (20) என்பவா் சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தைக் கூறி கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவல் துறையினா், பிரகாஷை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி சுகந்தி வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

இதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரகாஷுக்கு போக்ஸோ சட்டத்தின்கீழ் ஆயுள் தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.