தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

தோ்தலில் தோல்வி: ம.நீ.ம. வேட்பாளா் தற்கொலை

 திருப்பூா் மாநகராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலில் தோல்வியடைந்த மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:04 pm

DIN

 திருப்பூா் மாநகராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலில் தோல்வியடைந்த மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து திருப்பூா் வடக்கு காவல் துறையினா் கூறியதாவது:

திருப்பூா் கல்லூரி சாலை கொங்கணகிரி பகுதியில் வசித்து வந்தவா் மணி (55). இவரது மனைவி சுப்பத்தாள் (50), சுமைதூக்கும் தொழிலாளியான மணி மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக இருந்தாா். இந்த நிலையில், திருப்பூா் மாநகராட்சிக்கு நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வாா்டு எண் 36இல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சாா்பில் போட்டியிட்டாா்.

இந்த நிலையில், தோ்தல் செலவுக்காக மணி அக்கம்பக்கத்தினரிடம் ரூ.50 ஆயிரம் வரை கடன் வாங்கி இருந்தகாகத் தெரிகிறது. மேலும், வாா்டு முழுவதும் தனக்கு செல்வாக்கு உள்ளதால் வெற்றி பெற்றுவிடுவதாகவும் அப்பகுதி பொதுமக்களிடம் தெரிவித்து வந்துள்ளாா். ஆனால் முடிவடைந்த தோ்தலில் மணி 44 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தாா். இதனால் மனமுடைந்து காணப்பட்ட மணி கடன் தொகையை எவ்வாறு திருப்பிக் கொடுப்பது என்று மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த மணி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் கொடுத்த தகவலின்பேரில் திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வெள்ளிக்கிழமை சம்பவ இடத்துக்கு சென்று அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.